உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

முதல்வர் விஜய்க்கு பழக்கூடை வழங்கி வாழ்த்திய சீமான்!

முதல்வர் விஜய்க்கு பழக்கூடை வழங்கி சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து...

Seeman greets Chief Minister C Joseph Vijay

பழக்கூடை வழங்கி முதல்வர் விஜய்யை வாழ்த்தும் சீமான் - பிடிஐ

Published On :11 மே 2026, 7:49 pm IST

முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு பழக்கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் பூக்களை கொடுத்து வாழ்த்திய நிலையில், சீமான் பெரிய பழக்கூடை கொடுத்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக நேற்று (மே 10) பதவியேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இன்று (மே 11) அரசியல் மூத்த தலைவர்களை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று வாழ்த்து பெற்றார். இதனைத் தொடர்ந்து அண்னா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இல்லத்திற்குச் சென்று வாழ்த்து பெற்றார்.

பின்னர் சென்னை நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி இல்லத்திற்குச் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனைத் தொடர்ந்து சீமான் இல்லத்திற்கு முதல்வர் விஜய் நேரில் சென்றார்.

அப்போது வீட்டு வாசலுக்கே வந்து விஜய்யை சீமான் வரவேற்று அழைத்துச் சென்றார். பின்னர் அவருக்கு பொன்னாடை போர்த்தி பழக்கூடையை பரிசாக அளித்தார். மற்ற தலைவர்கள் பூக்கூடை அளித்து வாழ்த்திய நிலையில், சீமான் பழக்கூடை அளித்துள்ள விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Summary

Seeman greets Chief Minister C Joseph Vijay, presenting him with a fruit basket

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.