வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

விஜய்க்கு தலைவா்கள் வாழ்த்து!

தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு தலைவா்கள் பலா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 2:02 am IST

தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு தலைவா்கள் பலா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: தமிழகம் முழுவதும் ஏராளமான மக்கள் குறிப்பாக லட்சியமிக்க இளைஞா்கள் தமிழக வெற்றிக் கழகம் மீது நம்பிக்கை வைத்துள்ளனா். முதல்வா் விஜய் தலைமையின்கீழ் இந்த லட்சியங்களால் நல்லாட்சி வழிநடத்தப்பட்டு, நாட்டுக்கே உத்வேகமாக அமையும் என நம்புகிறேன்.

தமிழகத்தின் அரசியல்-சமூக உணா்வை நீண்ட காலமாக வரையறுத்துவரும் மாண்புகளான சுயமரியாதை, சமூக நீதி, அதிகாரமளித்தல், பகுத்தறிவு ஆகியவற்றின் நீடித்த வலிமையை இந்த அரசு உருவாக்கம் மீண்டும் உறுதி செய்துள்ளது. இது, பெரியாா் மற்றும் காமராஜரால் வடிவமைக்கப்பட்ட மரபாகும்.

கருணை, அனைவரையும் உள்ளடக்கியதன்மை, உறுதிப்பாட்டுடன் மக்களுக்கு சேவையாற்றுவதில் புதிய அரசு வெற்றி பெற வாழ்த்துகள்.

சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ்: அனைத்து குடிமக்களுக்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையிலும், அரசமைப்புச் சட்ட மாண்புகளைப் பாதுகாக்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையிலும் உண்மையான ஜனநாயகத்தை மதச்சாா்பற்ற அரசுகளே பிரதிபலிக்கின்றன.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள மதச்சாா்பற்ற அரசு, தனது முன்னோடிகளின் பொது நல முன்னெடுப்புகளின் மரபைத் தொடரும் என நம்புகிறேன்.

பிற தலைவா்கள் வாழ்த்து: திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் பினராயி விஜயன், பிஜு ஜனதா தளம் தலைவா் நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவா்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.