புதுச்சேரி ஜிப்மரில் காசநோய் விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஜிப்மர் நலவழிக் கல்வி இயக்கத்தின் தொடர் நிகழ்வாக, காசநோய் கண்டறிவோம், சிகிச்சை அளிப்போம், அகற்றுவோம் எனும் தலைப்பிலான இந்தக் கலந்துரையாடல் ஜிப்மர் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மருத்துவர்கள், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் நபர்கள் காச நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 2.7 லட்சம் நபர்கள் இந்த நோயால் இறக்கின்றனர். 44 ஆயிரம் பேர் எச்.ஐ.வி. நோய் கண்டறியப்படுகிறது. காச நோய் முற்றிலும் குணப்படுத்தக் கூடிய நோய். காச நோய்க்கான சிகிச்சை நாடு முழுவதும் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காச நோய்த் தடுப்புத் திட்டம் மூலம் அளிக்கப்படுகிறது என்றனர்.
ஜிப்மர் இயக்குநர் (பொ) மருத்துவர் விஷ்ணுகாந்த், உதவிப் பேராசிரியர், நுரையீரல் மருத்துவத் துறை, மருத்துவர் பழனிவேல், உதவிப் பேராசிரியர், நோய்த் தடுப்பு மற்றும் சமூக நல மருத்துவத் துறை, மருத்துவர் நோயல் மரியா ஜோசஃப், உதவிப் பேராசிரியர், நுண்ணியல் மருத்துவத் துறை, மருத்துவர் இ. செல்வராஜு, முது நிலை உறைவிட மருத்துவர் நுரையீரல் மருத்துவத் துறை ஆகிய துறைகளின் வல்லுநர்கள் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
நிகழ்ச்சியை மருத்துவ சமூக சேவை மைய மருத்துவ சமூகப்பணியாளர் அஜ்மல் தொகுத்து வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்!

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் !
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

