புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில், பிரான்ஸ் நாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பிரெஞ்சு மொழியில் புதியப் பாடப் பிரிவுகளை தொடங்க வேண்டும் என்று பிரான்ஸ் துணை தூதர் கேத்தரின் ஸ்வார்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுவைப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் பிரெஞ்சு துறையில் முதுகலை மற்றும் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் உள்நாடு, வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதுவை மற்றும் சென்னைக்கான பிரான்ஸ் நாட்டின் துணைத் தூதர் கேத்ரின் சுவார்டு செவ்வாய்க்கிழமை மாலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங்கை நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், பிரெஞ்சு மொழி மேம்பாட்டுக்காக பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சுத் துறை செய்து வரும் ஆய்வுப் பணிகளைப் பாராட்டினார். மேலும் அவர், பிரான்ஸ் நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான பாரீஸ் பல்கலைக்கழகம், லுôமிரி லியானே பல்கலைக்கழகம், லியோன் பல்கலைக்கழகம், மோன்ட்டேஜன் போர்டுயிக்ஸ் பல்கலைக்கழகம், ரெனீஸ் பல்கலைக்கழகம் மற்றும் புதுவையில் இயங்கி வரும் பிரெஞ்சு ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து புதுவைப் பல்கலைக்கழகம் பல்வேறு பிரெஞ்சு மொழித் தொடர்பான புதிய பாடப்பிரிவுகள் மற்றும் இந்தியா மற்றும் பிரெஞ்சு மொழி தொடர்பான புதிய வரலாற்றுத் தொன்மைகளை கண்டறியும் வகையிலான ஆய்வுகளை மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர், புதுவை பிரெஞ்சுத் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பிரான்ஸ் நாட்டில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், பிரான்ஸ் நாட்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், மாணவர்களும் புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்து பிரெஞ்சு மற்றும் இதர ஆய்வுகளை மேற்கொள்வதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரவும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தச் சந்திப்பின்போது, பிரெஞ்சு துணை தூதரக குழுவினர் இமானுவேல் சாம்சன், முனைவர் ஜெரோம் பவ், ரேயியா சிவன் மற்றும் பிரெஞ்சுப் பேராசிரியர் மற்றும் புல முதன்மையர் முனைவர் நளினி ஜே. தம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, பிரான்ஸ் தூதரகக் குழுவினர் புதுவைப் பல்கலைக்கழக வளாகத்தையும் சுற்றிப் பார்த்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
பிருத்விராஜின் கலிஃபா வெளியீட்டுத் தேதி!

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

நடிகர் அஜித் பிறந்த நாளில் ஓர் ஏமாற்றம்!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

