கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தூய்மை இந்தியா விழிப்புணர்வில் ஈடுபட்ட பல்கலை. மாணவர்கள்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், புதுவை மத்திய பல்கலைக்கழக சமூகவியல் துறை சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 3:26 am

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், புதுவை மத்திய பல்கலைக்கழக சமூகவியல் துறை சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.
 பிள்ளைச்சாவடி பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று மத்திய அரசின் துôய்மை இந்தியா திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
 அதோடு, கழிப்பறையின் அவசியம், பொது இடங்களில் அசுத்தம் செய்வதால் ஏற்படக் கூடிய சுற்றுப்புறச் சுகாதாரப் பாதிப்பு மற்றும் நோய் தொற்று உடல் நலன் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்கள் பொதுமக்களிடம் கொண்டுசேர்த்தனர். கழிப்பறையில்லாவர்களிடம் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள், கழிப்பறை கட்டுவதற்கான விண்ணப்பங்களையும் பொதுமக்களிடம் இருந்து பெற்று அரசுத் துறைகளில் சமர்ப்பித்தனர்.
 ஏற்பாடுகளை சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் குலாம் தஸ்தாகீர் மற்றும் அருணா ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.