தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி பெண் உள்பட 4 பேர், புதுச்சேரியில் இருந்து 470 கி.மீ. விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தை வியாழக்கிழமை தொடங்கவுள்ளனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுதல், தலைக்கவசம் அணிவதன் கட்டாயம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்களை செய்து வருகிறார்.
இந்த நிலையில், மகேஸ்வரி புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள் மூலம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விழிப்புணர்வுப் பயணம் மேற்கொள்ளப்போவதாக புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தப் பயணம் புதுவை கடற்கரை காந்தித் திடலில் இருந்து தொடங்கி புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, மதுரை, அருப்புக்கோட்டை, எட்டயபுரம் வழியாக தூத்துக்குடியில் முடிவடைகிறது.
மொத்தத்தில் தமிழகம், புதுச்சேரியில் 477 கி.மீ. தொலைவுப் பயணம் செய்து இந்த பிரசாரத்தை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.
மகேஸ்வரி ஏற்கெனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2ஆயிரம் கி.மீ. தொலைவு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

கள்ளழகர் தீர்த்தவாரி வைபவ உற்சவம்!

சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.3,237! அப்போ ஒரு டீ விலை?

திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

