புதுச்சேரியில் மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி குருசுக்குப்பம் மரவாடி தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (46). காங்கிரஸ் மீனவரணி பொதுச் செயலரான இவர், கடந்த 6-ஆம் தேதி காலை மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஆம்பூர் சாலை-செட்டித் தெரு சந்திப்பில் மர்மக் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பெரியக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலை தொடர்பாக வைத்திக்குப்பத்தை சேர்ந்த உண்ட நாராயணன், சுடுகாட்டான், கடந்த மாதம் கொலை செய்யப்பட்ட மீனவர் மாறனின் மகன் ராஜ்கமல், வம்பாகீரப்பாளையம் அதிமுக பிரமுகர் ஞானவேல் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே முத்தியால்பேட்டையை சேர்ந்த புல்ரி உள்பட 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை பிடித்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி
வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

