ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ரெட்டியார்பாளையம் கூட்டுறவு சங்கத் தேர்தல்: என்.ஆர்.காங். வேட்பாளர்கள் 9 பேரும் வெற்றி

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 பேரும் வெற்றி பெற்றனர்.

Updated On :21 மே 2018, 2:57 am

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 பேரும் வெற்றி பெற்றனர்.
புதுவை மாநிலத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, ரெட்டியார்பாளையம் கூட்டுறவு வங்கியின் நிர்வாகக் குழுவுக்கு 9 இயக்குநர்களைத் தேர்வு செய்ய தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 9 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற வேட்பாளர்களான பூ.பூபாலன்,   பி.ரகுபதி,  எஸ்.பழனிவேல்,  ஏ.பூபேஷ்,  கே.சக்திவேல்,  ஆர்.அன்பழகன்,  ஐ.எலிசபெத்,  ஆர்.சிவனேஸ்வரி,  ஆர்.லோகநாதன் ஆகிய 9 பேரும் அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமியை சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.