புதுவை மாநிலம் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுவை மாநிலம் திருபுவனை அருகே தமிழகப் பகுதியான சேழாங்கனூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி சரசு. இவர்களுக்கு வரதன் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராமலிங்கம் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில், சரசுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டதாம். இதையடுத்து, அவரை மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை வரதன் உடனிருந்து கவனித்து வந்தாராம்.
இந்த நிலையில், சனிக்கிழமை மருத்துவமனையில் உள்ள கழிப்பறைக்குச் செல்வதாக கூறிச் சென்ற சரசு நீண்ட நேரமாகியும் வரவில்லையாம்.
இதனால் சந்தேகமடைந்த வரதன் அங்கிருந்த செவிலியரிடம் கழிப்பறைக்குச் சென்று பார்க்கும்படி கூறினாராம். அங்கு சென்று பார்த்த போது, சரசு தான் அணிந்திருந்த சேலையால் கதவின் தாழ்ப்பாளில் தூக்கிட்டபடி கிடந்தாராம்.
இதுகுறித்து வரதன் திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளர் பிரியா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவு: அன்புமணி இரங்கல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல இன்னொருவர் இல்லை: ஊர்வசி





