விழுப்புரம் அருகே கிணற்றில் இறங்கி, மின் மோட்டார் பழுதை சரிசெய்து கொண்டிருந்த எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட இருவர் விஷ வாயு தாக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
விழுப்புரம் அருகே நன்னாடு, ஆலாத்தூரைச் சேர்ந்தவர் ராஜாராம் (50), விவசாயி. அப்பகுதியில் இவருக்குச் சொந்தமான விளை நிலத்தில் 50 அடி ஆழ கிணறு உள்ளது.
சில மாதங்களாக வறண்டுக் கிடந்த இந்த கிணற்றில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக நீர் சுரக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதிய ராஜாராம், விவசாயம் செய்ய திட்டமிட்டார்.
இதற்காக, அவர் சனிக்கிழமை கிணற்றில் இறங்கி மின் மோட்டாரை இயக்கிப் பார்த்தபோது, அது பழுதாகி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மின் மோட்டாரை சரி செய்ய, ராஜாராம் அதே ஊரைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் பன்னீர்செல்வம் (35) என்பவரை அழைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு கிணற்றுப் பகுதிக்குச் சென்றார். பின்னர், இருவரும் கிணற்றுக்குள் இறங்கி மின் மோட்டார் பழுதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, தண்ணீரின்றி வறண்டு இருந்த, அந்த குறுகலானக் கிணற்றில் பிராண வாயு (ஆக்ஸிஜன்) இல்லாத நிலையில், அங்கு சூழ்ந்திருந்த பிற விஷ வாயுக்கள் தாக்கி இருவரும் மயங்கி விழுந்தனர்.
இதற்கிடையே, வெகு நேரமாகியும் ராஜாராமும், பன்னீர் செல்வமும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவர்களைத் தேடிச் சென்றனர். அப்போது, இருவரும் விஷ வாயு தாக்கி கிணற்றுக்குள் மயங்கிக் கிடந்தது தெரிய வந்தது. உடனே, ஊர் மக்கள் உதவியுடன் அவர்கள் இருவரும் கயிறு கட்டி மீட்கப்பட்டு, 108 அவசர ஊர்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் நேரில் சென்று, கிணற்றை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சௌதி புரோ லீக்கில் 100ஆவது கோல் அடித்த ரொனால்டோ..! முதல் கோப்பை வெல்வாரா?

இந்திய கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ராமச்சந்திரன்!

புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்

விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்தியதில் மகிழ்ச்சி, ஆனால்... பிரின்ஸ் யாதவ் கூறியதென்ன?
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
