தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

சதுப்பு நிலக் காட்டை பாதுகாக்க வலியுறுத்தல்

புதுச்சேரியில் அழிந்து வரும் சதுப்பு நிலக் காட்டைப் பாதுகாக்க வேண்டும் என புதுச்சேரி சுற்றுச்சூழல் - சதுப்பு நிலக் காடுகள் பாதுகாப்பு மேம்பாட்டுச் சங்கம் வலியுறுத்தியது.

Updated On :22 அக்டோபர் 2018, 4:31 am

புதுச்சேரியில் அழிந்து வரும் சதுப்பு நிலக் காட்டைப் பாதுகாக்க வேண்டும் என புதுச்சேரி சுற்றுச்சூழல் - சதுப்பு நிலக் காடுகள் பாதுகாப்பு மேம்பாட்டுச் சங்கம் வலியுறுத்தியது.
இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் தலைவர் ம.செல்வமணிகண்டன் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் சதுப்பு நில வனப் பகுதி பல்வேறு நிகழ்வுகளால் அழிந்து வருகிறது. 
குறிப்பாக, இறால் பண்ணைகளுக்காக சதுப்பு நில புழுக்கள் (பாலீ கீட்ஸ்) வேட்டையாடப்பட்டு தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன. இதனால், சதுப்பு நில பல்லுயிர் பெருக்கம் மிகுந்த அழிவை நோக்கியுள்ளது. 
இதுதொடர்பாக வனத்துறை சார்பில், 2015 மற்றும் 2017- ஆம் ஆண்டுகளில் சதுப்பு நில புழுக்கள் வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டது. 
ஆனாலும், தொடர் கண்காணிப்பு இல்லாததால், இந்த வேட்டையானது தமிழக எல்லைப் பகுதியில் உள்ள புதுச்சேரி பகுதிகளான தேங்காய்த்திட்டு, முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், நல்லவாடு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
எனவே, இதுகுறித்து வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சதுப்பு நிலக் காட்டின் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.