அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலக் குழுக் கூட்டம் முதலியார்பேட்டையில் அதன் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.பெருமாள் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைப்பின் மாநிலச் செயலர் இரா.அந்தோணி பணிகள், அமைப்பு நிலை செயல்பாடுகள் குறித்துப் பேசினார். எதிர்கால செயல்பாடுகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அ.மு.சலீம், துணைச் செயலர் வி.எஸ்.அபிஷேகம் பேசினர்.
கூட்டத்தில், புதுவை மாநில அரசின் பல்வேறு அரசுத் துறைகளில் 7,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. சுமார் 2.50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். எனவே, காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சில அழகு நிலையங்களில் பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது. இதன் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற நவம்பர் 14- ஆம் தேதி போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், அமைப்பின் மாநிலத் துணைச் செயலர் ஏ.ரூவியர், பொருளாளர் கே.ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.சரவணன், பி.சக்திமுருகன், பி.பெஞ்சமின், எம்.மைக்கேல், வி.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிலிண்டர் விலை உயர்வு! முதுகில் குத்தும் பாஜக: டி.கே. சிவக்குமார்

NDA கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும்! அமைச்சர் எல். முருகன் நம்பிக்கை! | BJP

இது தெரியுமா? யானைகளுக்கு மட்டும் பெரிய காதுகள் இருப்பது ஏன்?

ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! பெட்ரோல், டீசல் விலையும் உயரும்! ராகுல்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

