
அனைவருக்கும் அறிவியல்பூர்வ கல்வியை வழங்கக் கோரி பிரசார பயணம்
அனைவருக்கும் தரமான அறிவியல் பூர்வ கல்வியை வழங்கக் கோரி, புதுச்சேரிக்கு வியாழக்கிழமை வந்த பிரசார பயணக் குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அனைவருக்கும் தரமான அறிவியல் பூர்வ கல்வியை வழங்கக் கோரி, புதுச்சேரிக்கு வியாழக்கிழமை வந்த பிரசார பயணக் குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அனைவருக்கும் தரமான -அறிவியல் பூர்வ கல்வியை வழங்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தின் தேசிய அளவிலான பிரசார பயணம் இந்தியாவின் நான்கு மையங்களில் இருந்து (காஷ்மீர், கன்னியாகுமரி, திரிபுரா மாநிலம் அகர்தலா, குஜராத்தின் ஆமதாபாத்) கடந்த செப்.3-ஆம் தேதி தொடங்கியது.
இந்தப் பிரசார பயணம் நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களையும், கல்வி வளாகங்களில் மாணவர்களையும் சந்திக்க உள்ளது. கன்னியாகுமரியில் தொடங்கிய பிரசார பயணத்துக்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி.சானு தலைமை வகித்தார். இதில், எஸ்.எப்.ஐ.தமிழ்மாநில செயலாளர் மாரியப்பன், மாநிலத் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தென்னிந்திய பயணக் குழு தமிழகம், புதுவை, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் இறுதியாக கேரளத்தில் நிறைவு பெறுகிறது. மத்திய பாஜக தலைமையிலான அரசு திட்டமிட்ட தாக்குதலை தொடர்ந்து கல்வி வளாகங்கள் மீது தொடுத்து வருவதை எதிர்த்து இப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில் சங்கத்தின் பிரதேச தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார்.
சங்க நிர்வாகிகள் வந்தனா, செந்தமிழ், பிரவீன், ஸ்டீபன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்தியக் குழு உறுப்பினர் அ. ஆனந்த், சங்கத்தின் புதுவை பல்கலை. தலைவர் ஸ்ரீஜித் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த பிரசாரப் பயணம் தமிழகம் வழியாக ஆந்திரத்துக்கு செல்லவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






