ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மழைக் கால நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மழைக் கால நிவாரணம் வழங்கக் கோரி, அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர்களின் சம்மேளனம் சார்பில், புதுச்சேரியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மழைக் கால நிவாரணம் வழங்கக் கோரி, அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர்களின் சம்மேளனம் சார்பில், புதுச்சேரியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 புதுச்சேரி தட்டாஞ்சாவடி கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலர் முருகன் தலைமை வகித்துப் பேசியதாவது:
 சட்டப்படி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.26,000 ஊதியம் வழங்க வேண்டும். விழாக் கால போனஸ் தொகையாக ரூ. 7000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கும் செஸ் வரி வதிப்பு முறையை விரிவுபடுத்த வேண்டும்.
 கட்டுமான நல வாரியத்தில் விண்ணப்பித்துள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். வாரியத்தில் பதிவுமுறையை எளிமையாக்க வேண்டும். வாரிய நிதியை கட்டுமானத் தொழிலாளர் நலத்திட்டங்கள் என்ற பெயரில் தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது.
 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பணி இடத்துக்கு இலவச பேருந்து அட்டை வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள மழைக் கால நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளும், கிராமப்புறங்களில் தொகுப்பு வீடுகளும் இலவசமாக வழங்க வேண்டும்.
 விபத்தில் இறப்பு ஏற்படும்போது இழப்பீட்டை ரூ. 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார் முருகன். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் தேசியத் தலைவர் சோ. பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலர் புருஷோத்தமன், துணைத் தலைவர் மு.அ. அக்பர், மாநிலக் குழு உறுப்பினர் கோ. பழனி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.