புதுச்சேரி உருளையன்பேட்டை சதே சிறப்புப் பள்ளி மற்றும் முத்தியால்பேட்டை சின்னாத்தா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி வைத்தி கன்னியம்மாள் அறக்கட்டளை சார்பில், உருளையன்பேட்டை தொகுதி கென்னடி நகரில் உள்ள சதே சிறப்புப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவுக்கு அறக்கட்டளையின் தலைவர் நல்லாசிரியர் வைத்தி கஸ்தூரி தலைமை வகித்தார்.
ஆசிரியர் விஜயரங்கம் வரவேற்றார். சதே சிறப்புப் பள்ளி இயக்குநர் சுகதன் நோக்கவுரை ஆற்றினார்.
விழாவில் பிப்டிக் தலைவர் இரா. சிவா எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தலைமை ஆசிரியர் அம்பிகா மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி, வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து மருத்துவர் சுமதி வாழ்த்துரை வழங்கினார்.
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் நடராஜன், சக்திவேல், ஜூலி, அஜிபாஷா, பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முத்தியால்பேட்டை பள்ளி: முத்தியால்பேட்டை சின்னாத்தா மகளிர் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், விரிவுரையாளர் சரஸ்வதி வரவேற்றார்.
பள்ளி துணை முதல்வர் லோகசுந்தரி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பலராமன், பட்டதாரி ஆசிரியர் ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முத்தியால்பேட்டை தொகுதி எம்எல்ஏ வையாபுரிமணிகண்டன் ஆசிரியர்களை பாராட்டி, பரிசு வழங்கிப் பேசினார்.
விழாவில் அவர் பேசும்போது, ஆசிரியர் பணி என்பது ஒரு தொழில் அல்ல, அது ஒரு தொண்டு. மாணவர்கள் கல் என்றால் ஆசிரியர்கள்தான் சிற்பிகள். மாணவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ளத்தின் வளர்ச்சியையும், மாணவர்களின் எண்ண ஓட்டங்களையும் ஆசிரியர்கள் ஆராய வேண்டும். மற்ற துறையினர் செய்யும் தவறுகள் அந்த துறையோடு நின்று விடும். ஆனால், கல்வித் துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தையே சீரழித்துவிடும்.
ஆசிரியரின் ஒவ்வொரு கண்டிப்பும் தங்களுடைய வளர்ச்சிக்குத்தான் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அந்த பக்குவத்தையும் ஆசிரியர்கள்தான் ஏற்படுத்த வேண்டும் என்றார் வையாபுரி மணிகண்டன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கௌதம் அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்கு: அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி
காலிறுதிக்கு முன்னேறியது நார்த்ஈஸ்ட் யுனைடெட்!

புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்கை செய்ய வேண்டும்: 19 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழின் அரிய ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பது நமது கடமை!
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!


