மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ரூ.5 லட்சம் மோசடி: தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மீது வழக்கு
கடன் தருவதாகக் கூறி மகளிர் சுயஉதவிக் குழுவினரிடம் ரூ.5 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடன் தருவதாகக் கூறி மகளிர் சுயஉதவிக் குழுவினரிடம் ரூ.5 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி -கடலூர் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் நிதி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனத்தை சிவகங்கை மாவட்டம், கீழ்மேடு அருகேயுள்ள அரசகிரி கிராமத்தைச் சேர்ந்த செபஸ்டின் என்பவர் நடத்தி வந்தார். அவரின் கீழ் 5 பேர் பணியாற்றினர்.
அவர்கள் மகளிர் சுய உதவிக் குழு நடத்துபவர்களிடம் தங்கள் நிறுவனத்தில் ரூ.1000 கட்டினால் அடுத்த மாதமே ரூ.30 ஆயிரம் கடன் தருவதாகக் கூறினராம். இதனை நம்பி அரியாங்குப்பம், பாகூர் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான சுய உதவிக் குழு பெண்கள் பணம் கட்டியுள்ளனர்.
ஒரு மாதம் கழித்து நிதி நிறுவனத்தை கடன் தொகைக்காக தொடர்பு கொண்டபோது, அதில் வேலை பார்த்து வந்த அனைவரது செல்லிடப்பேசிகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதனால் பதறிய சுய உதவிக் குழுவினர் குறிப்பிட்ட முகவரிக்கு சென்று பார்த்தபோது நிறுவனம் மூடப்பட்டிருந்தது. அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர்.
இந்த நிலையில், பாகூரைச் சேர்ந்த இளவரசனின் மனைவி சிவமணி, சுய உதவிக் குழுத் தலைவியான இவர், அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல் உதவி ஆய்வாளர் இளங்கோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





