
காவலர் தேர்வு: வயது வரம்பை தளர்த்தக் கோரி உண்ணாவிரதம்
காவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பைத் தளர்த்தக் கோரி, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பினர் புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
காவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பைத் தளர்த்தக் கோரி, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பினர் புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
புதுவையில் காவலர் தேர்வில் வயது வரம்பைத் தளர்த்த வலியுறுத்தி, மாணவர் கூட்டமைப்பினர் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரி காந்தி வீதியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். பொதுச் செயலர்கள்
முருகன், எமிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவலர் தேர்வுக்கான வயது வரம்பைத் தளர்த்த வேண்டும், அது வரை காவலர் பதவிக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் இறுதி நாளை தள்ளிவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டமைப்பின் நிர்வாகிகள் பேசினர்.
உண்ணாவிரதத்தில் மக்கள் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் கோ.சுகுமாறன், காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு தலைவர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







