மனித உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் முருகானந்தம் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் முருகானந்தம் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மனித உரிமைகள் - நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மனித உரிமைகள் - நுகர்வோர் பாதுகாப்பு இயக்க செய்தித் தொடர்பாளர் காளிதாசு தலைமை வகித்தார். மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் தேசிய செயலர் ஹென்றி திபேன், வழக்குரைஞர் மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலர் ஆர்.ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் அ.மு.சலீம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிச் செயலர் பாலசுப்பிரமணியன், மாநில மதிமுக அமைப்பாளர் கபிரியேல், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி பஷீர் அகமது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுப் பேசினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேச செயலர் ராஜாங்கம் கூறியதாவது: காவல் துறையில் இருப்பவர்கள் ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றனர். முருகானந்தம் மீது தாக்கல் நடந்தவுடன் தாக்குதல் நடத்திய எதிரிகள் மீது உருளையன்பேட்டை ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. புதுவை போலீஸார் ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
முழு அடைப்புப் போராட்டத்தின் போது கூட ஆளுநர் உத்தரவின்படிதான் காவலர்கள் செயல்பட்டனர்.
முருகானந்தம் மீதான தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு துணை நிற்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





