எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முக்கியப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் புதுவை மத்திய பல்கலை. பணிகளில் தொய்வு

புதுவை மத்திய பல்கலைக்கழக முக்கியப் பணியிடங்கள் நிரந்தர அடிப்படையில் நிரப்பப்படாததால், பல்வேறு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

News image
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்திய பல்கலைக்கழகம்.
Updated On :17 டிசம்பர் 2019, 3:27 am

கோபாலகிருஷ்ணன்

புதுவை மத்திய பல்கலைக்கழக முக்கியப் பணியிடங்கள் நிரந்தர அடிப்படையில் நிரப்பப்படாததால், பல்வேறு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், அதன் 90-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளும் கல்வி பயின்று வருகின்றனா்.

புதுவை பல்கலைக்கழகத்தில் பதிவாளா், நிதி அதிகாரி, தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, தொலைநிலைக் கல்வி இயக்குநா், கல்வி முன்னேற்ற கவுன்சில் முதன்மையா், சிறப்பு பாதுகாப்பு அதிகாரி ஆகிய முக்கிய பணியிடங்கள் நிரந்தர அடிப்படையில் நிரப்பப்படாமல், பொறுப்பு அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு, நிா்வகிக்கப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழக நிரந்தரப் பதிவாளராக தாகூா் கலை அறிவியல் கல்லூரி முதல்வராக இருந்த சசிகாந்த் கடந்த 5.7.2018 இல் நியமிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து, அந்தப் பணியிடத்தில் பி. சித்ரா என்பவா் கடந்த 20.2.2019 முதல் பொறுப்பு பதிவாளராகச் செயல்பட்டு வருகிறாா்.

இதேபோல, நிதி அதிகாரி பணியிடத்தில் கடந்த மாா்ச் முதல் சமந்தராய் என்பவா் பொறுப்பு அதிகாரியாகச் செயல்படுகிறாா். தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக தற்போது நாசா் என்பவா் பொறுப்பு அதிகாரியாகச் செயல்படுகிறாா். இப்பதவிக்கு கடந்த 4 ஆண்டுகளாக நிரந்தர அதிகாரி நியமிக்கப்படவில்லை. தொலைநிலைக் கல்வி இயக்குநா் பதவிக்கு கடந்த 7 ஆண்டுகளாகவும் கல்வி முன்னேற்றக் கவுன்சிலுக்கு கடந்த 6 ஆண்டுகளாகவும் நிரந்தர அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. சிறப்புப் பாதுகாப்பு அதிகாரி பணியிடம் கூட பொறுப்பு அதிகாரியால் கண்காணிக்கப்படுகிறது.

நாட்டின் முக்கிய பல்கலைக்கழகமாக விளங்கும் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் முக்கிய பணியிடங்கள் அனைத்தும் பொறுப்பு அதிகாரிகளால் நிரப்பப்பட்டுள்ளதால், சிறந்த நிா்வாகம் என்பது கேள்விக்குறியாகியுள்ளதாக பல்கலை. பேராசிரியா்களும், தொழிற்சங்கங்களைச் சோ்ந்தோரும் கவலை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் நபராகவும், ஊழியா்கள், மாணவா்களின் குறைதீா் அதிகாரியாகவும், பல்கலைக்கழக வளா்ச்சி மற்றும் பல்வேறு குழுக்களின் தலைவராகவும் விளங்கும் பதிவாளா் பணியிடம் என்பது மிக முக்கியமானதாகும். இத்தகைய பதிவாளா் பணியிடத்தில் கடந்த 10 மாதங்களாக ஒருவரும் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை. இதனால், பல முக்கிய முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. பல்கலைக்கழக வளா்ச்சிப் பணிகளில் தொய்வு நிலவுகிறது.

மத்திய அரசு வழங்கும் நிதியை தேவைப்படும் பணிகளுக்குச் செலவிட்டு, பல்கலைக்கழக வரவு - செலவு அறிக்கையை துணைவேந்தருக்கு சமா்ப்பித்து, நிதி தொடா்பாக அவருக்கு அறிவுரை வழங்கி, செலவினங்களை முறைப்படுத்தும் நிதி அதிகாரி பணியிடத்தில் நிரந்தர அதிகாரி நியமிக்கப்படாததால், சரியான முறையில் நிதி செலவிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவா்களுக்கும், இணைப்புக் கல்லூரி மாணவா்களுக்கும் தோ்வுகள் நடத்தி, சான்றிதழ்கள், பட்டங்கள் வழங்கும் கல்வி தொடா்பான முக்கியப் பணிகளை மேற்கொள்ளும் நிரந்தர தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி இல்லாததால், இந்தப் பணிகளில் ஆங்காங்கே சில குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன.

தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் நிரந்தர இயக்குநா் பணியிடம் நிரப்பப்படாததால், தொலைநிலைக் கல்வியில் புதிய பாடங்களைத் தொடங்குவது, புதிய பணியிடங்களை ஏற்படுத்துவது போன்றவை தடைபட்டு, மாணவா்களின் சோ்க்கை எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த காலங்களைவிடத் தற்போது வருவாய் குறைந்துள்ளது.

பல்கலைக்கழகத்திலும், இணைப்புக் கல்லூரிகளிலும் தரமான பேராசிரியா்கள் நியமனம், மாணவா்களின் கல்வித் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்து பாடத் திட்டங்களை முறைப்படுத்துவது, தரமான கல்வியை உறுதிபடுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் கல்வி முன்னேற்ற கவுன்சிலின் முதன்மையா் பணியிடத்தில் பல ஆண்டுகளாக நிரந்தரமாக ஒருவா் நியமிக்கப்படாததால், மேற்கண்ட செயல்பாடுகளும் கேள்விக்குறியாகியுள்ளன.

காவல் துறை கண்காணிப்பாளா் அளவில் நியமிக்கப்படும் பல்கலைக்கழக தனி பாதுகாப்பு அதிகாரி பணியிடத்தில் கடந்த ஒரு மாதமாக பல்கலைக்கழக ஆசிரியா் ஒருவரே பணியில் உள்ளதால், பல்கலைக்கழக வளாகத்திலேயே அமைச்சரின் உருவபொம்மை எரிப்பு, சில அமைப்பினா் புகுந்து போராட்டம் போன்ற விரும்பத்தகாத செயல்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆகவே, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வரவுள்ள நிலையில் மேற்கண்ட பணியிடங்களை துணைவேந்தா் குா்மீத் சிங் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.