காங்கிரஸ் வெற்றிக்காக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
அந்த வகையில், ராஜ்பவன் தொகுதி வாக்குச்சாவடி குழு மற்றும் மாநில மாவட்ட, இதர பிரிவு நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொகுதி எம்எல்ஏவும், முதல்வரின் நாடாளுமன்ற செயலருமான லட்சுமிநாராயணன் தலைமை வகித்து, கட்சியினருக்கான சக்தி செயலியை அறிமுகம் செய்து வைத்தார். ராகுல் புகைப்படத்துடன் கூடிய சுவர்க்கடிகாரமும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், ராகுல் காந்தி பிரதமரானால் நாடு வளர்ச்சி பெறும். புதுவையும் வளர்ச்சி பெறும். எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். கட்சி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். இதில் ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன், மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேமலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








