அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

பார்வைக் குறைபாடு உடையோருக்கு கண்ணாடி

தேசிய கண் பார்வை இழப்பு தடுப்புத் திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் பார்வைக் குறைபாடுடையோருக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

Updated On :23 ஜனவரி 2019, 8:53 am IST

தேசிய கண் பார்வை இழப்பு தடுப்புத் திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் பார்வைக் குறைபாடுடையோருக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
தேசிய கண் பார்வை இழப்பு தடுப்புத் திட்டத்தின் மூலம் உலக கண் பார்வை பராமரிப்பு மாதத்தை முன்னிட்டு, கண் பரிசோதனை முகாம் குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட அருந்ததி நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இதில், புதுச்சேரி திட்ட அலுவலர் மருத்துவர் தணிகாசலம் வழிகாட்டுதலின்படி, பார்வைக் குறைபாடு உடையோர் கண்டறியப்பட்டு, இலவச கண் கண்ணாடி வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வங்கும் நிகழ்ச்சி அருந்ததி நகர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. கண் தொழில்நுட்ப உதவியாளர் 
சரவணன் வரவேற்றார். 
சுகாதார ஆய்வாளர் யசோதா முன்னிலை வகித்தார். மருத்துவ அதிகாரி அஜ்மல் கண் பார்வையின் முக்கியத்துவம் மற்றும் கண் பராமரிப்பு குறித்துப் பேசியதுடன்,  பார்வைக் குறையுடையோருக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார்.
சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். நிகழ்ச்சி நிறைவில் பொதுமக்கள் கண்தான உறுதிமொழி ஏற்றனர்.  
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அங்கன்வாடி ஊழியர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.