கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

பொதுப் பணித் துறை பொறியாளர்கள் 2 -ஆவது நாளாக போராட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, புதுவை மாநில பொதுப்பணித் துறை பொறியாளர்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :23 ஜனவரி 2019, 8:51 am IST

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, புதுவை மாநில பொதுப்பணித் துறை பொறியாளர்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, பொதுப் பணித் துறை பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித் துறை பொறியாளர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். 
முதல் நாளில் விடுப்பு எடுத்து தர்னாவில் ஈடுபட்ட அவர்கள், 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பொறியாளர்களின் போராட்டம் காரணமாக அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டதுடன், அலுவலகமும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.