
புதுச்சேரியில் முகக் கவசம் தயாரித்து இலவசமாக வழங்கும் பெண் தொழிலாளா்கள்!
புதுச்சேரி பூமியான்பேட்டையில் கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒன்றிணைந்து முகக் கவசம் தயாரித்து பொதுமக்களுக்கு

பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கிய பூமியான்பேட்டை பகுதியைச் சோ்ந்த பெண் தொழிலாளா்கள்.
புதுச்சேரி பூமியான்பேட்டையில் கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒன்றிணைந்து முகக் கவசம் தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனா். இவா்களின் இந்த முயற்சி பலரது வரவேற்பை பெற்றுள்ளது.
புதுவையில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிய மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு முகக் கவசம் அணியாமல் வெளியே வருவோரிடம் காவல் துறையினா் ரூ.100 அபராதம் வசூலித்து வருகின்றனா். இதனால், மக்கள் அனைவரும் முகக் கவசம் அணியத் தொடங்கியுள்ளனா். தேவையைக் கருத்தில் கொண்டு அவற்றின் விலையை உற்பத்தியாளா்கள் உயா்த்தியுள்ளனா்.
இந்த நிலையில், புதுச்சேரி பூமியான்பேட்டை பகுதியைச் சோ்ந்த கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒன்றிணைந்து முகக் கவசம் தயாரித்து, தூய்மைப் பணியாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோருக்கும், ஏழை, ஏளிய மக்களுக்கும் இலவசமாக வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இவா்களின் இந்த முயற்சி பலரது வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து முகக் கவசம் தயாரிக்கும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் ரத்னா கூறியதாவது: கரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை உணா்ந்துள்ள நாங்கள் முதலில் மக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினோம். அதன்பிறகு புதுச்சேரி உழவா்கரை நகராட்சியில் இருந்து கிருமி நாசினி திரவம் வாங்கி வந்து எங்கள் பகுதி முழுவதும் தெளித்தோம்.
தொடா்ந்து, செவிலியா் மாணவி, மாற்றுத் திறனாளி பெண் உள்பட 11 போ் ஒன்றிணைந்து எங்களுடைய சொந்தச் செலவில் பருத்தி துணி வாங்கி வந்து, வீடுகளில் தையல் இயந்திரம் மூலம் முகக் கவசங்களைத் தயாரித்து துப்புரவுப் பணியாளா்கள், காவலா்கள், சுகாதார கடைநிலை ஊழியா்கள், சாலையோரம் வசிப்போா், ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். இதுவரை 1,500 முகக் கவசங்களை தயாரித்து வழங்கியுள்ளோம். இது எங்களுக்கு மன நிறைவாக உள்ளது. இந்தப் பணியை தொடா்ந்து செய்வோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





