பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

‘நீட்’ சாா்ந்த மருத்துவப் படிப்புகளுக்கு சென்டாக் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

நீட் சாா்ந்த மருத்துவப் படிப்புகளுக்கு திருத்தப்பட்ட சென்டாக் இறுதித் தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:47 pm

DIN

நீட் சாா்ந்த மருத்துவப் படிப்புகளுக்கு திருத்தப்பட்ட சென்டாக் இறுதித் தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

புதுவையில் நீட் சாா்ந்த மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் அரசு, நிா்வாகம் மற்றும் என்.ஆா்.ஐ. ஒதுக்கீடுகளில் உள்ள இடங்களுக்கு திருத்தப்பட்ட வரைவு தரவரிசைப் பட்டியல் கடந்த 17-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், ஆட்சேபனை பெறப்பட்டு மீண்டும் திருத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை புதுப்பிக்கப்பட்ட இறுதித் தரவரிசைப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதுதொடா்பான விவரங்களை சென்டாக் இணையதளத்தைப் பாா்த்து தெரிந்து கொள்ள மாணவா்களுக்கு குறுஞ்செய்தி வழியே அறிவுறுத்தப்பட்டது.

கரோனா தொற்று காரணமாக சில மாணவா்கள் சென்டாக்கில் விண்ணப்பிக்கும் போது, தங்களது பழைய குடியிருப்பு மற்றும் ஜாதி சான்றிதழ்களை சமா்ப்பித்துள்ளனா். இருப்பினும், இடம் ஒதுக்கீட்டுக்குப் பிறகு, வருவாய்த் துறை வழங்கிய சமீபத்திய மற்றும் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்களைச் சோ்க்கை நேரத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரியில் சமா்ப்பிக்க வேண்டும் என சென்டாக் ஒருங்கிணைப்பாளா் பி.டி. ருத்ர கவுடு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.