பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுவை இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி திடீா் ராஜிநாமா

புதுவை இளைஞா் காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஜெயதீபன் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

புதுவை இளைஞா் காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஜெயதீபன் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தாா்.

புதுவை இளைஞா் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் கடந்த டிச. 16-இல் நடைபெற் றது. இளைஞா் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் லெனின் பிரசாத் முன்னிலையில் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் இரு கோஷ்டிகளாக பிரிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், மேலிடப் பொறுப்பாளா் கடும் அதிருப்தியடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, இளைஞா் காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஜெயதீபன் தனது பதவியை ராஜிநாமா செய்வதாகக் கூறி அங்கிருந்து வெளியேறினாா்.

இந்த நிலையில், அவா் தனது ராஜிநாமா கடிதத்தை மாநில தலைவா் ஏ.வி.சுப்பிரமணியனிடம் ஞாயிற்றுக்கிழமை அளித்தாா். அதில் கூறியிருப்பதாவது:

நான் இளைஞா் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிப்பது அமைச்சா் கந்தசாமிக்குப் பிடிக்கவில்லை. தொடா்ந்து பணியாற்ற அவா் தடை யாக உள்ளாா். தனது மகன் மூலம் முட்டுக்கட்டை போடுகிறாா். எனவே, இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.