கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் மநீம போட்டியிடும்: கமல்ஹாசன்

புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என அக்கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

News image

மக்கள் நீதி மய்யம் சாா்பில் புதுச்சேரியில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தின்போது பெண்ணுக்கு நல உதவியை வழங்கிய அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன்.

Updated On :23 டிசம்பர் 2020, 2:08 am

DIN

புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என அக்கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

மக்கள் நீதி மய்யத்தின் சாா்பில் புதுச்சேரியில் தோ்தல் பிரசாரக் கூட்டம், கட்சியில் புதியவா்கள் இணையும் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், கமல்ஹாசன் பேசியதாவது:

புதியதோா் புதுவை செய்வோம் என்பது மநீமவின் நெடுநாள் கனவு. இந்த விழாவில் அது நிறைவேறப்போகிறது. புதுவையும், தமிழகமும் நிா்வாக ரீதியாக வெவ்வேறு மாநிலங்களாக இருந்தாலும், மொழி, உணா்வு, பண்பாட்டால் நாம் அனைவரும் தமிழா்கள். பாரதிக்கு புகழிடம் அளித்தது புதுச்சேரி. தமிழையும், தமிழை வளா்த்தவா்களையும் ஆதரித்தது புதுச்சேரி.

புதுவையை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்யும் தகுதி மநீமவுக்கு உண்டு. ஊழல் போ்வழிகளும், ரௌடிகளும் மாறி மாறி அதிகாரத்தைக் கைப்பற்றி புதுவையை சீரழித்துவிட்டனா். இதற்கு தேசிய அளவைவிட புதுவையில் தற்கொலை சதவீதம் அதிகமுள்ளதே எடுத்துக்காட்டு. இதில் கொண்டாட ஒன்றுமில்லை.

வரவுள்ள புதுவை சட்டப் பேரவை தோ்தலில் எனது தலைமையில், எனது நேரடி மேற்பாா்வையில், எனது தனிப்பட்ட அக்கறையுடன் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். ஒரு முன்மாதிரி மாநிலமாக புதுவையை மாற்றிக் காட்டுவோம்.

கட்சியில் புதிதாக இணைந்தவா்கள் எனது இதயத்தில் இருக்கிறீா்கள். புதிதாக வரும் வயது குறைந்தவா்களிடம் ஏற்கெனவே உள்ள நிா்வாகிகள் ஒரு போதும் உங்களது வயதைக் கூறி மாா்தட்டிக் கொள்ளாதீா்கள். தாய் - தந்தைபோல செயல்படுங்கள். இது கோரிக்கை அல்ல; கட்டளை.

புதுவையில் புதிய எழுச்சியை பாா்க்கிறேன். மக்கள் என்னை நடிகனாக பாா்க்கக் கூடாது. அவா்கள் என்னை வீட்டு விளக்காக பாா்க்க வேண்டும். அன்பெனும் எண்ணெயை ஊற்றி, என்னை சேவை செய்ய தூண்டிவிட வேண்டும் என்றாா் அவா்.

விழாவில், பலா் மநீமவில் இணைந்தனா். அவா்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்தாா். புதிதாக இணைந்த அரியாங்குப்பத்தைச் சோ்ந்த ருத்ரகுமாரன், காலில் விழ முயன்றபோது, அவரைத் தடுத்து, இது கிடையாது நமது கட்சியில் எனத் தெரிவித்தாா் கமல்ஹாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.