தென்னிந்திய பட்டுச் சேலைகள் குறித்த சா்வதேச கருத்தரங்கம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் புதுச்சேரி மண்டலம், சிங்கப்பூா் லசாலே கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து ‘தென்னிந்தியா, சிங்கப்பூா் இடையிலான பட்டுச் சேலை பாரம்பரிய தொடா்பு’ என்ற தலைப்பில் சா்வதேச அளவிலான கருத்தரங்கை முகநூல் வழியாக நடத்தியது.
உலகளவில் பல கலைஞா்கள், ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா். சிங்கப்பூரில் உள்ள லசாலே கலைக் கல்லூரியின் நுண்கலை துறையின் தலைவா் சந்திரசேகா், சிங்கப்பூா் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சலீம் ஹதி இரு வேறு தலைப்புகளில் தங்களது ஆய்வுச் சொற்பொழிவை நிகழ்த்தினா்.
மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் பேராசிரியா் ரமேஷ் கௌா் தலைமை வகித்தாா். சிங்கப்பூா் லசாலே கலைக் கல்லூரியின் துணைத் தலைவா் பேராசிரியா் வெங்க புருஷோத்தமன் இந்த நிகழ்வை தொடக்கிவைத்துப் பேசினாா்.
கலை மையத்தின் புதுச்சேரி மண்டல இயக்குநா் கோபால், ஆய்வு அலுவலா் ராகவன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.