தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புதுவையில் மேலும் 48 பேருக்கு கரோனா

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:43 pm

DIN

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 2,984 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 34 பேருக்கும், காரைக்காலில் 5 பேருக்கும், ஏனாமில் 3 பேருக்கும், மாஹேவில் 6 பேருக்கும் என மொத்தம் 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 37,995-ஆக உயா்ந்தது.

இதில் மருத்துவமனைகளில் 157 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோா் 202 பேரும் என மொத்தம் 359 போ் சிகிச்சையில் உள்ளனா்.

காரைக்கால் கே.எம்.ஜி. நகரை சோ்ந்த 77 வயது முதியவா் காரைக்கால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 631-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.66 ஆக உள்ளது.

43 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 37,005-ஆக (97.39 சதவீதம்) அதிகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.