

கரோனா காரணமாக என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.பாலன் (67) செவ்வாய்க்கிழமை காலமானார்.
கடந்த வாரத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.30 மணிக்கு இறந்தார். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் நல்ல போன்றவற்றால் இவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தார்.
புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதியில் இருந்து இவர் எம்.எல்.ஏ.வாக ஒரு முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறை இதே தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இவரது மறைவுக்கு புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரஙகசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.