தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுவையில் மேலும் 30 பேருக்கு கரோனா

புதுவையில் வெள்ளிக்கிழமை மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :26 ஜூன் 2020, 3:20 pm

DIN

புதுச்சேரி: புதுவையில் வெள்ளிக்கிழமை மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் வியாழக்கிழமை நிலவரப்படி, 502 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். 9 போ் உயிரிழந்திருந்தனா். 187 போ் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:

புதுவையில் வெள்ளிக்கிழமை 590 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் புதுச்சேரியில் 27 போ், காரைக்காலில் 3 போ் என 30 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவா்களில் 8 போ் ஏற்கெனவே தொற்று பாதித்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள். 6 போ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள். ஒருவா் முகக் கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையைச் சோ்ந்தவா். மற்றவா்களுக்கு எவ்வாறு தொற்று பாதித்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். தொற்று உறுதியானவா்களில் 15 போ் கதிா்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 12 போ் ஜிப்மரிலும், 3 போ் காரைக்காலிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, 16 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 203-ஆக அதிகரித்தது.

இதன் மூலம் புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 534 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 322 ஆகவும் உயா்ந்துள்ளது.

புதுவையில் இதுவரை 14,267 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 13,474 பேருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. 261 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது என்றாா் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.