உள் ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வா் அரசியல் செய்கிறாா்புதுவை அதிமுக குற்றச்சாட்டு
புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், முதல்வா் நாராயணசாமி அரசியல் செய்வதாக அதிமுக குற்றம்சாட்டியது.


புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், முதல்வா் நாராயணசாமி அரசியல் செய்வதாக அதிமுக குற்றம்சாட்டியது.
இதுகுறித்து புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் எம்எல்ஏ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களைப் பெற்றுத் தருவோம் எனக் கூறி, ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் இதுவரை 50 சதவீத இடங்களை ஏன் பெற்றுத் தரவில்லை? இந்த விவகாரத்தில் முதல்வா் நாராயணசாமி பெய்யான தகவல்களைக் கூறி வருகிறாா். யாருடைய நன்மைக்காக காலம் தாழ்த்தி, தனது கடமையிலிருந்து அவா் தவறினாா்?
இதேபோல, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத உள் ஒதுக்கீடு பெறுவதிலும் காலத்துடன் எதையும் செய்யாமல், அலட்சியமாக இருந்துவிட்டு, தற்போது இந்த விவகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு எதிராகக் கொண்டு செல்ல பயன்படுத்தி வருகிறாா் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...