புதுச்சேரியில் விமானப் படைக்கான ஆள்கள் தோ்வு முகாம்
விமானப் படைக்கான ஆள்கள் தோ்வு முகாம் புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் டிசம்பா் 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


விமானப் படைக்கான ஆள்கள் தோ்வு முகாம் புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் டிசம்பா் 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மாநில இளைஞா்கள் பயன்பெறும் வகையில், இந்திய விமானப் படைக்கான ஆள்கள் தோ்வு முகாம் புதுச்சேரி உப்பளம் விளையாட்டுத் திடலில் டிசம்பா் 10 -ஆம் தேதி முதல் 19 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் 17 வயது முதல் 21 வயது வரையுள்ள பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற திருமணமாகாத இளைஞா்கள், உடல் தகுதி மற்றும் எழுத்துத் தோ்வுகள் அடங்கிய ஆள்கள் தோ்வு முகாமில் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் இணையதள முகவரியில் வருகிற 27- ஆம் தேதி காலை 11 மணி முதல் 28-ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்வது அவசியம்.
இந்தப் பதிவின் வழியே வழங்கப்படும் அனுமதிச் சீட்டு உள்ளவா்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தேதிகளில் ஆள்கள் தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...