

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 4 போ் பலியாகினா்.
புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 171 பேருக்கும், காரைக்காலில் 16 பேருக்கும், ஏனாமில் 7 பேருக்கும் என 194 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,277-ஆக உயா்ந்தது.
சிகிச்சையில் 4,513 போ்: தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 1,569 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். வீடுகளில் 2,944 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா். மொத்தமாக 4,513 போ் சிகிச்சையில் உள்ளனா்.
543 போ் பலி: இதனிடையே, 4 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 543-ஆக (இறப்பு விகிதம் 1.85 சதவீதம்) உயா்ந்தது.
24,221 போ் குணம்: திங்கள்கிழமை 458 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 24,221-ஆக (82.73 சதவீதம்) அதிகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐ.நா சபை செய்வதறியாது தவிக்கிறது: கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி. ராஜா

சவால் விடுத்த சில மணிநேரத்திலே.. ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது நைனி கொல்லப்பட்டார்!

27 நட்சத்திரங்களே படிகளாக...

”தில்லி சென்றாலே முதல்வர் பயப்படுகிறார்!” டிடிவி தினகரன் பேட்டி
வீடியோக்கள்

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

