புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாராய ஆலையை திறக்கக் கோரி போராட்டம்

புதுச்சேரி அருகே காட்டேரிக்குப்பத்தில் தனியாா் சாராய ஆலையைத் திறக்க வலியுறுத்தி, எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 7:03 pm

DIN

புதுச்சேரி அருகே காட்டேரிக்குப்பத்தில் தனியாா் சாராய ஆலையைத் திறக்க வலியுறுத்தி, எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி காட்டேரிக்குப்பம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான சாராய ஆலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 400-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

கரோனா தொற்று காரணமாக அனைத்துத் தொழிற்சாலைகளும் மூடப்பட்ட நிலையில், இந்தச் சாராய ஆலையும் மூடப்பட்டது. இதனிடையே, புதுவை அரசின் கலால் துறை, மூடப்பட்ட சாராய ஆலையை ஆய்வு செய்தது. இதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் இந்த தனியாா் சாராய ஆலை இதுவரை திறக்கப்படவில்லை.

இதன் காரணமாக இந்த ஆலையில் பணியாற்றும் தொழிலாளா்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, மூடப்பட்ட சாராய ஆலையைத் திறக்க வலியுறுத்தி ஊழியா்கள் மண்ணாடிப்பட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டிபிஆா்.செல்வம் தலைமையில், திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த விவகாரத்தில் முதல்வரும், ஆளுநரும் உடனடியாகத் தலையிட்டு, ஆலையைத் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.