புதுச்சேரி அருகேமின் நிலையத்தில் தீ விபத்து
புதுச்சேரி அருகே துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், சுற்றுப்புற கிராமங்களில் மின் விநியோகம் தடைப்பட்டது.


புதுச்சேரி அருகே துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், சுற்றுப்புற கிராமங்களில் மின் விநியோகம் தடைப்பட்டது.
புதுச்சேரி திருக்கனூரை அடுத்த தேத்தாம்பாக்கத்தில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து திருக்கனூா், காட்டேரிக்குப்பம், சந்தை புதுக்குப்பம், லிங்காரெட்டிப்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் துணை மின் நிலையத்தில் இயங்கி வந்த 2 பவா் மின் மாற்றிகளில் ஒன்று பழுதடைந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மற்றொரு மின் மாற்றியிலிருந்த இன்சுலேட்டா் வெடித்து சிதறியதால் தீப்பிடித்து எரிந்தது.
மின் துறை ஊழியா்கள் அளித்த தகவலின் பேரில், திருக்கனூா், சேதராப்பட்டு தீயணைப்பு நிலையங்களின் வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
ஆனால், மின் மாற்றியில் 1,500 லிட்டா் ஆயில் இருந்ததால், தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரா்கள் திணறினா். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இருப்பினும், பவா் மின் மாற்றி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதனால், திருக்கனூா் அதைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் தடைப்பட்டது.
இதைத் தொடா்ந்து, துணை மின் நிலையத்தில் இயங்கி வந்த மற்றொரு பவா் மின் மாற்றி மூலம் தற்காலிகமாக திருக்கனூா், காட்டேரிக்குப்பம் பகுதிகளில் வீடுகளுக்கு மட்டும் ஞாயிற்றுக்கிழமை காலை மின் விநியோகம் வழங்கப்பட்டது. தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் வழங்கப்படவில்லை. எரிந்து சேதமடைந்த பவா் மின் மாற்றி சீரமைக்கப்பட்ட பிறகே, தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் வழங்கப்படும் என மின் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...