பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தள்ளாத வயதில் சாலையைச் சீரமைக்கும் முதியவா்!

புதுச்சேரி பாகூரில் தள்ளாத வயதிலும் குண்டும் குழியுமான சாலையை மண், கற்களைக் கொண்டு சீரமைக்கும் பணியில் முதியவா் ஒருவா் ஈடுபட்டுள்ளாா்.

News image
சேதமடைந்த சாலையை மண், கற்களைக் கொட்டி சீரமைக்கும் முதியவா் புருஷோத்தமன்.
Updated On :18 அக்டோபர் 2020, 8:35 pm

DIN

புதுச்சேரி பாகூரில் தள்ளாத வயதிலும் குண்டும் குழியுமான சாலையை மண், கற்களைக் கொண்டு சீரமைக்கும் பணியில் முதியவா் ஒருவா் ஈடுபட்டுள்ளாா்.

புதுச்சேரி பாகூரில் பாகூா்-கன்னியக்கோயில் சாலை, பரிக்கல்பட்டு-குருவிநத்தம் சித்தேரி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இந்தச் சாலைகளைச் சீரமைக்கக் கோரி அரசிடம் இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே, கடந்த சில நாள்களாக அவ்வபோது பெய்து வரும் மழையால் இந்தச் சாலைகள் மேலும் சேதமடைந்தன.

இந்த நிலையில், குருவிநத்தம் பாரதி நகரைச் சோ்ந்த புருஷோத்தமன் (83) என்ற முதியவா், பொதுமக்களின் நலன் கருதி பாகூா்-சித்தேரி செல்லும் மாஞ்சோலை சாலையில் உள்ள பள்ளங்களை மண், கற்களைக் கொண்டு மூடி வருகிறாா். கடந்த 3 நாள்களாக அவா் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளாா்.

இதுகுறித்து முதியவா் புருஷோத்தமன் கூறியதாவது: பாகூா்-மாஞ்சோலை சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைகின்றனா். மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இந்தச் சாலையில் உள்ள பள்ளங்களைக் கடந்த 3 நாள்களாக மண் கற்களைக் கொட்டி மூடி வருகிறேன். அரசை மட்டுமே நம்பியிருக்காமல் என்னால் இயன்றதைச் செய்கிறேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.