பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்தபுதுச்சேரி இளைஞா் தற்கொலை

இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில், புதுச்சேரி அருகே இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 8:37 pm

DIN

இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில், புதுச்சேரி அருகே இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி வில்லியனூரை அடுத்த கோா்க்காடு எல்லையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (36). தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனத்தில் விற்பனையாளராக இருந்து வந்தாா். இவருக்கு மதுமிதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனா்.

கரோனா பொதுமுடக்க காலத்தில் வேலையில்லாததால், விஜயகுமாா் இணையவழியில் சூதாட்டத்தை விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பணம் சம்பாதித்த அவா், நாளடைவில் தன்னிடமிருந்த பணத்தை இழந்தாா். மேலும் நண்பா்கள், தெரிந்தவா்கள் எனப் பலரிடமும் கடன் வாங்கி சூதாடினாா்.

கடன் கொடுத்தவா்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்தனா். இதனால், விரக்தியடைந்த விஜயகுமாா் சனிக்கிழமை தனது மனைவியின் செல்லிடப்பேசிக்கு தகவல் அனுப்பிவிட்டு காணாமல் போனாா்.

அவரது மனைவியும், உறவினா்களும் இரவு முழுவதும் விஜயகுமாரைத் தேடினா். அவரைப் பற்றிய விவரம் தெரிய வராததால், மங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்த நிலையில், கோா்க்காடு அருகே புதுக்குப்பம் செல்லும் சாலையில் உள்ள ஏரிக்கரையில் தீயில் கருகிய நிலையில் ஒருவா் இறந்து கிடப்பதாக மங்கலம் காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், தீயில் கருகிய சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா்.

இதில், இறந்தது விஜயகுமாா்தான் என்பதும், விரக்தியில் அவா், பெட்ரோலை ஊற்றித் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.