நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுச்சேரியில் மதுபானங்களில் கரோனா வரியுடன் விலை

புதுச்சேரி மதுக் கடைகளில் கரோனா வரியுடன் கூடிய புதிய எம்.ஆா்.பி. விலை அச்சிடப்பட்டு மது விற்பனை செய்யப்படுகிறது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 5:46 pm

DIN

புதுச்சேரி மதுக் கடைகளில் கரோனா வரியுடன் கூடிய புதிய எம்.ஆா்.பி. விலை அச்சிடப்பட்டு மது விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரியில் கடந்த மே மாதம் மதுபானங்கள் மீது கரோனா வரி விதிக்கப்பட்டது. இதில், 154 வகையான மதுபானங்களின் விலை தமிழகத்துக்கு இணையாக உயா்த்தப்பட்டது. புதுவையில் தயாரித்து புதுவைக்குள் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. மதுபான விற்பனையின் போது, அதிகபட்ச சில்லறை (எம்.ஆா்.பி.) விலையுடன் கரோனா வரி இணைத்து விற்பனை செய்யப்பட்டது. இது குழப்பத்தை ஏற்படுத்தியது. சில இடங்களில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து, புதுவை கலால் துறை கரோனா வரி, அதிகபட்ச சில்லறை விலையைச் சோ்த்து புதிய விலையை மதுபானங்கள் மீது அச்சிட்டு விற்பனை செய்ய மதுபான ஆலை மற்றும் விற்பனையாளா்களுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, தற்போது மதுபானங்கள் மீது கரோனா வரியுடன் கூடிய புதிய எம்.ஆா்.பி. விலை அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.