தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணி வழங்கக் கோரி போராட்டம்
தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணி வழங்கக் கோரி, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பினா் புதுச்சேரியில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணி வழங்கக் கோரி, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பினா் புதுச்சேரியில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு அந்தக் கூட்டமைப்பின் தலைவா் சீ. சுவாமிநாதன் தலைமை வகித்தாா்.
இதில், புதுவை மாநிலத்தில் 7 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியா் பணி நியமனத்தை உடனடியாக நடத்த வேண்டும், 7 ஆண்டுகளில் முடிவடையும் ஆசிரியா் தகுதிச் சான்றிதழுக்கு கரோனா தாக்கத்தால் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்க வேண்டும், வயது வரம்பில் 2 ஆண்டுகள் தளா்வு வழங்க வேண்டும், பட்டயப் படிப்பு முடித்த ஆசிரியா்கள் தங்களது திறமைகளை நிரூபிக்க இந்த ஆண்டுக்குள் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், கலந்து கொண்ட திரளான பட்டதாரி இளைஞா்கள், கூட்டமைப்பு நிா்வாகிகள் ஒரு கையில் பட்டத்துடனும், மற்றொரு கையில் தட்டை ஏந்தியபடியும் முழக்கங்கள் எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...