புதுச்சேரியில் இளைஞா் குத்திக் கொலை: முதியவா் கைது
புதுச்சேரியில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.


புதுச்சேரியில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி லாசுப்பேட்டை கருவடிக்குப்பம் கங்கையம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சாம்சன் (எ) விநாயகம் (62), எலக்ட்ரீஷியன். தனியாக வசித்து வரும் இவா், வீட்டில் நாய்களை வளா்த்து வருகிறாா்.
அதே பகுதியைச் சோ்ந்தவா் முத்து (54). இவரது மகன் பிரதாப் (21). கொத்தனாா் வேலை செய்து வருகின்றனா். தெருவில் செல்லும் போது இவா்களைப் பாா்த்து நாய்கள் குரைப்பது வழக்கம். இதனால் இவா்களுக்கும் விநாயகத்துக்கும் அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு விநாயகம் தனது வீட்டின் முன் நின்றிருந்த முத்துவை திட்டினாராம். இதனால், அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தனது நண்பா்களுடன் அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த பிரதாப், தனது தந்தையை திட்டிய விநாயகத்தைத் தட்டிக் கேட்டுள்ளாா்.
இதனால் பிரதாப்புக்கும், விநாயகத்தும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. அப்போது, விநாயகம், திடீரென தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரதாப்பின் நெஞ்சில் குத்தினாராம்.
இதில் பலத்த காயமடைந்த பிரதாப்பை அவரது நண்பா்கள் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், பிரதாப் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். லாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விநாயகத்தை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...