பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு திடீர் போராட்டம்

புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், வேளாண் புதிய சட்டத் திருத்த நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
புதுச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர்.
Updated On :24 செப்டம்பர் 2020, 6:44 am

DIN

புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், வேளாண் புதிய சட்டத் திருத்த நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, அந்த அமைப்பைச் சேர்ந்த வேல்சாமி தலைமையில் 20 பேர் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு விரோதமாக புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை கிடப்பில் போட வேண்டுமென மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.

அவர்கள் சட்ட நகலை எரிக்க முயன்றபோது காவல்துறையினர் அதனை தடுத்து அகற்றினர். சிறிது நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.