கூடுதல் மின் கட்டண வசூல்: புதுவை பாஜக நாளை போராட்டம்

கூடுதல் மின் கட்டணம் வசூல் செய்யப்படுவதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (செப்.29) முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக அறிவித்தது.

கூடுதல் மின் கட்டணம் வசூல் செய்யப்படுவதைக் கண்டித்து, புதுவையின் அனைத்துத் தொகுதிகளிலும் மின் கட்டணம் செலுத்தும் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.29) முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக அறிவித்தது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் வெளியிட்ட அறிக்கை: மக்கள் கரோனா துன்பத்தில் உள்ள நிலையில், புதுவை அரசு மின் கட்டணங்களைக் கூடுதலாக வசூலித்து வருகிறது. குடிசை வீட்டுக்குக்கூட ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் வருகிறது. மிகச் சிறிய கடைக்கும் ரூ. 22 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. இதனால், பல குடும்பங்கள் மின் கட்டணத்தைக் கட்ட முடியாமல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

இந்தக் கூடுதல் கட்டணச் சுமையை உடனடியாக புதுவை அரசு குறைக்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (செப்.29) மாநிலத்தின் அனைத்து மின் கட்டணம் செலுத்தும் இடங்களில், மக்களுடன் இணைந்து பாஜக சாா்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com