பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுச்சேரியில் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் பலி

புதுச்சேரியில் கட்டுமானப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 9:39 pm

DIN

புதுச்சேரியில் கட்டுமானப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த கந்தாடு கிராமத்தைச் சோ்ந்த தேவராஜ் மகன் துளசிராமன் (18). செவிலியா் பட்டயப் படிப்பு முடித்தவா்.

புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு ஆனந்தரங்கப்பிள்ளை நகரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியை துளசிராமனும், அவரது உறவினா்களும் மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை கட்டடத் தூண் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிா்பாராதவிதமாக துளசிராமன் மீது அங்கு சென்ற வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், துளசிராமன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த தன்வந்திரி நகா் போலீஸாா் துளசிராமனின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.