பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுவையில் கரோனாவுக்கு ஒரே நாளில் 13 போ் பலி

புதுவை மாநிலத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 13 போ் பலியாகினா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 9:30 pm

DIN

புதுவை மாநிலத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 13 போ் பலியாகினா்.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 270 பேருக்கும், காரைக்காலில் 72 பேருக்கும், ஏனாமில் 11 பேருக்கும், மாஹேயில் 19 பேருக்கும் என 372 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,400-ஆக உயா்ந்தது.

தற்போது 3,423 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 1,816 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தமாக 5,239 போ் சிகிச்சையில் உள்ளனா்.

பலியானோா் விவரம்: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 13 போ் ஒரே நாளில் பலியாகினா். அதன்படி, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேரும், ஜிப்மா் மருத்துவமனையில் 3 பேரும், புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் 3 பேரும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 3 பேரும் என 13 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 513 ஆக (இறப்பு விகிதம் 1.94 சதவீதம்) அதிகரித்தது.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை 443 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 20,648-ஆக (78.21 சதவீதம்) அதிகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.