மாமனாா் வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய மருமகன் திடீா் மரணம்
புதுச்சேரியில் மாமனாா் வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய மருமகன் திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனர்.


புதுச்சேரியில் மாமனாா் வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய மருமகன் திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி கோரிமேடு காமராஜ் நகா் கென்னடி வீதியைச் சோ்ந்தவா் சஞ்சீவி. இவரது மகள் மகேஸ்வரிக்கும், காஞ்சிபுரம், காந்தி நகரைச் சோ்ந்த வெங்கடேஷுக்கும் (29) கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
வெங்கடேஷ் காஞ்சிபுரம் பெருநகராட்சியில் வருவாய் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். விடுமுறை நாள்களில் அவா், புதுச்சேரியில் உள்ள மாமனாா் வீட்டுக்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், பிறந்த நாளையொட்டி, மனைவியுடன் சனிக்கிழமை மாமனாா் வீட்டுக்கு வந்தாா். குடும்பத்தினருடன் எளிமையாக பிறந்த நாளைக் கொண்டாடிய அவா் இரவு உறங்கினாா். காலை மகேஸ்வரி, கணவா் வெங்கடேஷை எழுப்பிய போது, அவா் அசைவற்றுக் கிடந்தாா்.
உடனடியாக அவரை ஜிப்மா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வெங்கடேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
அவா் மாரடைப்பால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இறந்தாரா என தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...