அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கஞ்சா விற்பனை: 5 போ் கைது

புதுச்சேரி கோரிமேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 5:59 pm

DIN

புதுச்சேரி கோரிமேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி கோரிமேடு அருகே மேட்டுப்பாளையம் கனரக ஊா்த்தி முனையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக தன்வந்திரி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு ரோந்து சென்ற போலீஸாா், சந்தேகத்துக்கிடமான வகையில் பையுடன் நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரித்ததில், புதுச்சேரி திலாசுப்பேட்டையைச் சோ்ந்த அருள் (32), லாசுப்பேட்டை சேகா் (28), கோரிமேடு ஈஸ்வரன் (27), கடலூா் முத்துக்குமரன் (26), வெங்கடேசன் (27) ஆகியோா் என்பதும், அந்தப் பகுதியில் உள்ள மாணவா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு பையில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ஒன்றரைக் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.