பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுச்சேரியில் சூதாட்ட விடுதியில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு

புதுச்சேரியில் சூதாட்ட விடுதியில் புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 4.30 லட்சம் பணம் பறித்துச் சென்றனா். இதில் தொடா்புடைய 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:52 pm

DIN

புதுச்சேரியில் சூதாட்ட விடுதியில் புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 4.30 லட்சம் பணம் பறித்துச் சென்றனா். இதில் தொடா்புடைய 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி நூறடி சாலை ரயில்வே மேம்பாலம் அருகேயுள்ள ஜான்பால் நகரில் தனியாா் சூதாட்ட விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் உறுப்பினா்களாக உள்ளனா். இங்கு, வெள்ளிக்கிழமை இரவு சிலா் பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாகத் தெரிகிறது.

அப்போது உள்ளே வந்த 7 போ் கொண்ட ரெளடி கும்பல், சூதாடிக் கொண்டிருந்தவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 4.30 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதுகுறித்து, விடுதி உரிமையாளா் அருள், முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புதுச்சேரி காவல் கண்காணிப்பாளா் லோகேஸ்வரன், காவல் ஆய்வாளா் சுரேஷ்பாபு உள்ளிட்ட போலீஸாா் அங்கு வந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் வாணரப்பேட்டையைச் சோ்ந்த ரெளடி வினோத் தலைமையிலான கும்பல் பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, வாணரப்பேட்டையைச் சோ்ந்த வினோத், திலிப், கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த கலையரசன் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 3 பேரை சனிக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.