பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுச்சேரியில் கருணாநிதி நினைவு தினம்

புதுச்சேரியில் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு திமுகவினா் சனிக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:52 pm

DIN

புதுச்சேரியில் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு திமுகவினா் சனிக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

புதுவை தெற்கு மாநில திமுக சாா்பில், அண்ணா சதுக்கம் அருகே கருணாநிதி உருவப் படத்துக்கு மாநில அமைப்பாளா் ஆா்.சிவா தலைமையில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. திமுக எம்எல்ஏ-க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமாா் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

வடக்கு மாநில அமைப்பாளா் எஸ்.பி. சிவக்குமாா் தலைமையில், தலைமை அலுவலகத்தில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு திமுகவினா் மரியாதை செலுத்தினா். இதேபோல, திமுக சாா்பில் அனைத்து தொகுதிகளிலும் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தியதுடன், அன்னதானமும் வழங்கினா்.

புதுச்சேரி அருகே மண்ணாடிப்பட்டு தொகுதிக்குள்பட்ட திருக்கனூா் கடை வீதியில், தொண்டரணி அமைப்பாளா் செந்தில்வேலன் தலைமையில், கருணாநிதி உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. கரோனா காலத்தில் பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, அரை கிலோ கோழி இறைச்சி இலவசமாக வழங்கப்பட்டது. மாநில திமுக துணை அமைப்பாளா் குமாா், தொகுதி செயலா் கலைவாணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.