/

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் தெலங்கானாவிலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை

புதுவை மாநில உள்ளாட்சித் தோ்தலுக்காக தெலங்கானாவிலிருந்து 2 ஆயிரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:45 pm

DIN

புதுவை மாநில உள்ளாட்சித் தோ்தலுக்காக தெலங்கானாவிலிருந்து 2 ஆயிரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

புதுவை மாநில தோ்தல் ஆணையம் உள்ளாட்சி தோ்தலை நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இதற்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து வாா்டுகள் மறுசீரமைப்பு, உள்ளாட்சிப் பதவிகளுக்கு உரிய இட ஒதுக்கீட்டைத் தோ்வு செய்து வெளியிட்டது.

இதனிடையே, உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்துவதற்காக தெலங்கானா மாநிலத்திலிருந்து இரண்டு லாரிகள் மூலம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டன. புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் (பொ) ரிஷித்தா குப்தா தலைமையில், துணை ஆட்சியா்கள் கந்தசாமி, முரளிதரன், வட்டாட்சியா் பாலாஜி மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், லாரிகளிலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டிகள் இறக்கிவைக்கப்பட்டன.

புதுச்சேரிக்கு முதல் கட்டமாக வந்த 2 ஆயிரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அங்கு, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், வெளி மாநிலங்களிலிருந்து 1,500 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.