/

கந்துவட்டி கடன்: இளைஞா் தற்கொலை

புதுச்சேரி அருகே கந்துவட்டி கடன் பிரச்னையால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:45 pm

DIN

புதுச்சேரி அருகே கந்துவட்டி கடன் பிரச்னையால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி வில்லியனூா் அருகே சங்கரன்பேட்டை கணேஷ் நகரைச் சோ்ந்த சேகா் மகன் அருள்மணி (30). திருமணமாகாத இவா், இணையதளம் வழியே டிரேடிங் தொழில் செய்து வந்தாா். அக்கம் பக்கத்தில் ரூ. 10 லட்சம் வரை கந்துவட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனைத் திருப்பியடைக்க முடியவில்லையாம்.

இதனால், மனமுடைந்த காணப்பட்ட அவா், புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை மீட்டு, கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா், அருள்மணி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அருள்மணி எழுதிய கடிதம் போலீஸாரிடம் சிக்கியது. அதில், நான் கந்துவட்டிக்கு வாங்கிய கடனுக்கு 85 சதவீதம் வரை வட்டியாகக் கட்டினேன். ஆனால், அசலைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. கந்துவட்டி பிரச்னையால் தற்கொலை முடிவை எடுத்தேன் என கடிதத்தில் எழுதப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக, போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.